பதின்பருவத்து நினைவுகள்

தேதித்தாள் கிழித்திட,முகம்நோக்கும் நாளொன்று.
அன்று உதித்தவள், முதன்முறை மனம் கவர்ந்தவள்
முகமது அகத்தினுள் படரும்

தேன்மொழியாள் தெள்ளறிவுடையாள் இன்முகத்தாள்
கலைமகளாம் அவள் ஆடியப் பாடிய கணங்கள்
களித்ததை மனம் கிளறும்.

திமிரா சுந்தரியாய் திறம்பல கொள்ள மாதிரியாய்
தீராது மிளிரும் பண்புச்சுடரால்
திரி ஈர்த்தவள் அவள்.

புதிராய்த் தெரிந்த அவள் நயனம் - அது ஈர்க்க
சதிராடத் துடித்த என் திறம் - முத்துச்சரம் அவள்
பார்வை பட்டால் ஏறும் நாணச் சுரம்
பக்கம் வந்தால் நண்பர் செய்வர் ஆரவாரம்

காதலாக அரும்பவில்லை இதயம் நொறுக்கிடும் பிரிவில்லை
இறுதியாய்க் கண்டது மணக்கோலப்படம்
தெரியாது அவள் போன தடம்

பாதைகள் மாறி கடந்தாயிற்று
நறுமணமாய்ப் புன்முறுவல் மலர விடும்
பதின் பருவத்து நினைவுகள்

எழுதியவர் : Omkumar (2-Mar-18, 3:51 am)
சேர்த்தது : omkumar
பார்வை : 414

மேலே