அழகோவியமே☸

என் நெஞ்சம் எனும் வாசலில் உன் அன்பெனும் புள்ளி வைத்து அழகோவியமாய் வரைந்த கோலம் நீயடி★
காலம் முழுதும் நான் கடத்தும் நொடிகளாய் உன் இதய துடிப்பு இருக்குதடி★
நான் வாங்கும் மூச்சு காற்று உன் மேனி தழுவி வந்ததடி★
என் உடலின் சக்தி எல்லாம் உன் பார்வையின் கருணை கொடுத்ததடி★என் இளமையின் வேகமெல்லாம் உன் இதழால் என் இதழ் நுழைந்ததடி★
உன் பாசப்பரிவே என் நரம்புகளாய் அமைந்து எமன் பாசம் தடுக்குதடி★
அழகோவியமே என் நெஞ்சின்
அழியா ஓவியமே வண்ணம் கலையாமல் எண்ணம் சேர்த்திருப்பேன் உனையே,
என் உயிர் தானாய் கலையும் வரை★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (3-Mar-18, 7:34 pm)
பார்வை : 244

மேலே