அஞ்சலில் வந்த யோனி

அரவமற்ற இருளில்
ஒளிர்ந்தது கைபேசி.
சமூக வலையில்
நாமிரு சிலந்திகள்...
யாயும் ஞாயும்
யாராகியர்ந்தும்
யானும் நீயும்
எவ்வழியறிதும்
காமம் கிளர்ந்த
சிலந்திகள் நாம்.
மெல்லக் கரையும்
வல்லிருள் மடியில்
ஊடலில் நுரைத்த
வரிகள் தொய்ந்து
வார்தைகளாயின...
இன்னும் இன்னும்
நில்லா மின்னலாய்
விரக அமிலத்தை
கைபேசி கடத்தின.
உச்சி மலையில்
தவறி விழுந்த
விலங்கின் வேகத்தில்
துடித்த வார்த்தைகள்
இருபுறம் பாய்ந்திட
சீறிடும் கடுமூச்சு.
விரலில் கிளைத்த
மன்மத ஸ்வரங்கள்
காற்றினுள் கலந்து
புணர் ஸ்தனங்களில்
உருகி வழிந்தன
சிற்ப சொற்களாய்...
செம்புலப்பெயல் நீரில்
சரிந்தது போர்வாள்.
கலந்த பெருக்கினில்
நனைந்தன விழிகள்.
சுடரென எரிந்த
கைபேசி அணைத்திட
தனிமையை நெறித்த
புன்னகைத்துயிலில்
அன்புடை நெஞ்சம்...

எழுதியவர் : ஸ்பரிசன் (4-Mar-18, 3:59 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 66

மேலே