சிரியா
உலகம்
என் அன்னை மடி
உருக்குலையும்
உயிர்கள்
என் உறவுகள்
கண்ணீர் கொண்டு
கவிதை வரைகிறேன்
சிரியாவில்
சரியும்
என் சொந்தங்களுக்கு..
அரசியல் பசிக்கு-
அணுகுண்டு விருந்து
இரத்தம் சிந்துகிறதே
முத்துக்கள்
இரத்தம் சிந்துகிறதே
மழலை மொட்டுக்கள்
இரத்தம் சிந்துகிறதே
செஞ்சுரிய உதயம்
இரத்தம் சிந்துகிறதே
செவ்வானம்
தோன்றுகிறதே
சிந்திய இரத்தங்களை
பிம்பித்து
இரத்த வெள்ளம்
ஓயாதா
அணுகுண்டு சத்தங்கள்
ஓயாதா
அமைதி பூக்கள்
பூக்காதா
அரவணைக்க
கைகள்
நீளாதா
ஓ,சிரியா
சொந்தங்களே
உம்மை போலே
நானும் வாடுகிறேன்
உலக நாடுகளின்
மௌனங்களினால்...