அமைதி

சத்தங்கள்
வாய் பொத்தும்
நிலையல்ல அமைதி,
உன்னுள் உன்னையே
இழந்திருக்கும்
நிலை தான் அமைதி

நெஞ்சு சுமக்கும்
நினைவிலிருந்து
உலகை மட்டுமல்ல
உன்னை பற்றிய
சிந்தனையும்
இல்லா நிலையில் தான்
அமைதி காண இயலும்

எழுதியவர் : கோ. கணபதி. (5-Mar-18, 2:38 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : amaithi
பார்வை : 67

மேலே