காமாட்சி எனும் அவன்

பெரும் பாறையொன்று
உடைக்க முடியாது.
உடைத்தேயாகவேண்டும்.
போனான் காமாட்சி.
தடுத்தோர் பலர்.
விசிறிச்சென்றான்.
பாறை....பெரிது...
முட்கள் முளைத்த
நாக்கை நீட்டியது.
ஜொலித்த கண்களில்
உயிர் கடுத்தது.
சுற்றிலும் நடந்தவன்
கால்களில் விலங்கு
பூத்து தடுத்தன.
மாயங்களில் சிலிர்த்து
நரைத்தது கருந்தலை.
உளி துவர்ந்து
புவியில் கலந்தது.
பாறை பாறைகளாகி
தின்னத் துவங்கின.
இருள் மெலிந்த நேரம்
ஒற்றை விளக்கொளியில்
வந்தான் தனியே
பிடி மண்ணுடன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Mar-18, 3:15 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 136

மேலே