எப்படிப்பட்டது நம் காதல்
எதுவும் விளங்கவில்லை உன்
முதல் பார்வையில்..
எது என்று அறியும் முன்
உன் விழி வீச்சு
என்னுள் வேரோடிக்
காதலாய் என் கண்ணில்
வழிந்தபோது என்
ஊன விழிப்
பார்வையிலிருந்து
ஓடி மறைந்தாய்....
கோடையிடி
மின்னலாய் எப்போது
உன் விழிச்சிரிப்பை
காண்பேன்.? அதுவரை
உன் நினைவே
என்னை உருக்க.,
அழுத கண்ணீரில்
உழுது பயிரிட்டிருந்தால் கூட
விளைவது உன் நினைவே...
உன் மௌனம் மட்டுமே
சாட்சியாய்.,எதை
எப்படி நினைத்திருப்பேன்.?
விளங்க வைக்கக்கூட
விளையாத உன் நிலை
விசனப்பட வைக்கிறது என்னை.....

