மலரின் காதல்

புதிதாக பூத்திருக்கும் பூவிங்கே நான்தானே
புரியாத உணர்ச்சியொன்று எனக்குள்ளே ஏன்தானே
தென்றல் காற்றென்னை தேடித்தானே வருகிறதே
தெரியாத புதிரொன்றை சொல்லிவிட்டு போகிறதே

காற்றென்ன சொன்னதென்று கண்டறிய முடியவில்லை
காதலென்று தெரிந்தபின்பு காத்திருக்க முடியவில்லை
மனமெனதை திருடிச்சென்ற கள்வனே நீயாரோ...
மலரென்னை மணந்திடத்தான் மன்னவனே வாராயோ...

எழுதியவர் : தங்க பாண்டியன் (6-Mar-18, 11:03 am)
சேர்த்தது : தங்க பாண்டியன்
பார்வை : 102

மேலே