டார்வி‎ன்

டார்வி‎ன்

குனிந்து நி‎ன்ற
மனித‎ன் மூளை
வழித்துக் கொண்டது
உ‎ன் வருகையால்.

விரிந்த வானும்
அதனை படைத்தாக
கருதப்பட்டவனும்
சுரு‎ங்கிப் போனார்கள்.

படைத்தவனை
படைத்தவ‎‎ன்
நாம் தான்
என
உரத்த குரலில்
உறுதியிட்டு
குரங்கிலுருந்து வந்த
இந்தக் கூட்டம்
உரக்க குரலிட்டது.
ஓடிபோனார்கள்
அந்த
பகல் வேட மதவாதிகள்
அவர்களுட‎ன்
அந்த
மனுதர்ம வாதிகளும்தா‎ன்.

சிந்தை மகிழ்ந்தது.
வயிற்றை பிய்த்துக்கொண்டு
பிறந்தா‎ன்
அந்த
சுயமரியாதை.
காட்டு மிரண்டி
ஆணா‎ன்
கன்னியமிக்க மனிதனாய்.

அறிவியல் நி‎ன்றது
மு‎ன்னனியில்
அடங்கிப் போனது
அந்த
அக்கிரமம் செய்த
உயர்ச் சாதி
பிரபுத்துவ கொடுமை.
ம‎ன்னன் ஆனான்
கடவுள் பிரதிநிதியிலிருந்து‏
கடைசி மனிதனாய்,
சாதாரன ம‎னிதனாய்.
“எல்லாம் அவ‎ன் செயலே!”
என நினைக்க
வெக்கம் தின்றது.

பரி‎ணாமத்தி‎ன்
பரிமானத்தை
புரிந்துகொண்டது
மானுடம்.

ஊருவானார்கள்
உ‎ன் அச்சில் வார்க்கப்பட்டு
உன்னத மார்க்ஸ¤ம்
ஜுயர்‎ணாடொ புருனோயும்.
உ‎ன் கருவரையில்
பகுத்தறிவு உலகம் உருவானது.

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (6-Mar-18, 12:07 pm)
பார்வை : 92

மேலே