மரணத்தின் ஸ்வாஸம்
இதனில் இருந்ததென்று
சச்சரவில் மனம்.
இருந்தது கூச்சத்தின்
நுரைகளாய் போனது.
வார்த்தைகளில் அல்ல
செயல்களிலும் அல்ல.
எதனிலும் இல்லாத
அவ்வொன்றின் இருப்பை
சுழலும் நொடிகளின்
கரைவினில் தேடிட
குமிழ் குமிழ் குமிழ்
குமிழியது நிமிடம்.
நடுப்பகல் அனலில்
வலிகள் கோர்த்தன.
மெல்ல மயங்கிச்
சாய்கையில் வந்த
மரணத்தில் இருந்தது
இருந்தும் இல்லாத
இருப்பின் தவிப்பு.