அல்பெர் காம்யூவின் இடக்கை

வலது கைதான்
எழுதியிருக்கும்.
இடமிருந்த இதயம்
ஓயாச் சலனத்தில்...
இறந்தது அம்மாதான்.
அழுகை வரவில்லை.
கனவில் தைத்த முள்
கனவில்தான் வலிக்கும்.
காதலி அல்ல அவள்
காதலித்தாளோ அவனை...
தோட்டாக்கு தெரிந்ததோ
சதை துளைப்பதுதான்.
நன்றாக துளைத்தது.
பின் கைதும் விசாரணையும்...
நன்றாக நடந்தது.
உன் மரணம் கூட
தப்பில்லைதான் எனக்கு
போய்ச்சேர்...நண்ப..
உன் மதத்தின் மகுடிக்கு
எல்லோரும் ஆட
என்னையும் ஆடவிட்டாய்.
பார் நண்பா...
அன்றிலிருந்து
என் மத மகுடி
என்னை முட்டுகிறது.
நீ விசாரணையை
எழுதித் தொலைத்திருக்கலாம்
இதயமிருந்த இடக்கையால்.

எழுதியவர் : ஸ்பரிசன் (6-Mar-18, 12:46 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 93

மேலே