புது மலர் பனித்துளி



தூய பனித்துளி :
நாங்கள் கதிரவனின் கைதிகள்
உலகை உய்விக்கும் கதிரவன்
சிறிது நேரத்தில் எங்களை
மேலே தூக்கிடுவான்
ஏசுவிற்கும் காந்திக்கும்
உலகில்
தூய்மைக்கு கிடைத்த
பரிசு சாவுதானே
புது மலர் :
நாங்களும் உதிர்ந்திடுவோம்
மாலையோடு எங்கள்
வாழ்வும் முடிந்துவிடும்
பனித்துளி :
உதிர்ந்தபின்னும் உங்களுக்கு
வாழ்விருக்கிறது
கடவுளின் காலடியிலிருந்து
கல்லறை வரை உங்களை வைத்து கொண்டாடுகிறார்கள் மனிதர்கள்
இறந்தபின்னும் சிலர் வாழ்வில்
அர்த்தமிருக்கிறது
அதோ கதிர் வந்துவிட்டது
பனித்துளி கடைசி விடை பெற்றது
புதுமலர்
மௌனமாய் நின்றது .
------கவின் சாரலன் .




எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-11, 4:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 359

மேலே