நல்லுணவு தாரீர்

வெண்பா
இல்லை அமங்களமாம் சொல்லார் சுவையேதும்
இல்லாக் கரும்புப்ப யிர்ஏனாம் --- நல்காரம்
இல்லா மிளகு மிளகாய்ப்ப யிர்கற்றார்
இல்லையே பூவிலும்வா சம்
சாரிலாத்தக் காளியிஞ்சிக் காரமில்லைக் கத்திரி
பாரியமெ ரிக்கப்ப யிர்செய்தார் --- பாரு
வெறுஞ்சக்கை வேர்கடலை பாலில் கலப்பாம்
மருந்தை எதிலும்சேர்த் தார்
ஆளுயரப் பூசனியும் கேளுநீள் வெண்டையாம்
சூளைச் சுரையையும் சேர்த்தழித்தார் --- காளான்
செயற்கை விளைவு இயற்கைக்கீ டாகா
செயற்கைருசி யைப்போக்கிற் று
மருந்தும் விருந்தும்வேண் டாநான்கு வேளை
விருந்துவேண்டாம் நல்லுணவு வேண்டும் --- தருவீர்
மருந்துணவு உண்ண மருந்துவேண்டும் கேளு
வரும்நோ யறியாரே இன்று
உப்பிலாப் பண்டம் வெறுத்தவர்க்கு உப்புரமாம்
தப்பாய் மருந்துணவும் வேண்டாமே --- அப்பா
ருசியுணவு முன்பயிரே தேகம் நசியா
ருசிபின்ம ருந்துணவில் லை
--ராஜப் பழம் நீ
(9-mar- 2018).