நொந்ததுள்ள மிந்த நொடி

காதலிக் காவிட்டால் கத்தியால் குத்துவதோ?
சோதனைக் காலமோ தோகையர்க்கு? - மாதவத்தால்
வந்துதித்த வஞ்சியரின் வாழ்க்கை விளையாட்டோ?
நொந்ததுள்ள மிந்த நொடி.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-18, 12:50 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 51

மேலே