பாடல் 2

கில்லி திரைப்படத்தின்
"காதலா காதலை காதலால்
சொல்லடா"என்ற பாடலின்
ராகத்திற்கு நான் எழுதிய வரிகள்


தனிமையின் பிடியிலே...
கவிதையால்...
கண்வடிகிறேன்
மலரே...பெண்மலரே
ஏன் பிரிந்து போகிறாய்???
சுடர்களும் குளிர்ந்ததே
உன்னருகே இருந்த நாள்...
அனலாய் உணர்கிறேன்
உன்பிரிவை உணர்வதால்...

நெஞ்சில் வாழும் கீதம்
அழிந்தா போகும்??
கீதம் போன்றதே காதல்
நிலையாய் வாழும்

நிஜங்கள்...நிழலாகிடுமா???
நிலவே உந்தன் நிழலே...
தேடுகிறேன்...
கனவுகள்...நிஜமாகிடுமா???
மலரே உந்தன் மனமே...
வேண்டுகிறேன்

-அ.ஜீசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (12-Mar-18, 5:24 am)
பார்வை : 136

மேலே