தூக்கி நிறுத்திடுவீர்

சாதிக்கொரு கட்சிகள்
என்ற நிலை மாறி
வீதிக்கொரு கட்சியென
விரிவடைந்து இன்று
வீட்டுக்கொரு கட்சியும்
உருவாகும் நிலையில்
உள்ளது தமிழ் நாடு. ....

மனிதர்கள் நிறைந்து
மனிதம் மறைந்தது. ...
திரைக்கதை வசனங்கள்
மேடையில் ஒலிக்கிறது !
திரையில் நடித்தவர்கள்
நேரில் பேசுகிறார்கள்..

எதிர்வரும் காலமோ
ஏக்கத்தில் மிதக்கிறது
தூக்கமும் தொலைந்து
தூங்கா வாழ்வானது !

தொடர்ந்தால் இந்நிலை
தொல்லையே இனியும்
அகதிகள் ஆனோமே
அன்னை மண்ணிலே !
அடுத்த தலைமுறையே
ஆழ்ந்து சிந்திப்பீர்
தாழ்ந்த தமிழகத்தை
தூக்கி நிறுத்திடுவீர் !

பழனி குமார்
13.03.2018

எழுதியவர் : பழனி குமார் (13-Mar-18, 3:11 pm)
பார்வை : 224

மேலே