அவள் ஒரு அன்புமழை

அவள் ஒரு அன்புமழை
அந்திவானம் எழுதிய அழகிய கவிதை
இந்திரவனத்தில் உலா வரும் மேனகை
இதயத் தடாகத்தில் நித்தம் மலரும் தாமரை
சந்திர பிம்பங்கள் நிறுவிய மயன்மாளிகை
செந்தமிழ் பாடும் அவள் செவ்விதழ் புன்னகை
அந்தக் காதல் புன்னகையில் காவியம் ஆயிரம் பிறக்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-18, 9:03 am)
பார்வை : 111

மேலே