STEPHEN HAWKING

நோய் உன்னை
சக்கர நாற்காலியில்
தள்ளிவிட்ட போதும்
வானத்தை ஆகாய நட்சத்திரங்களை
நிமிர்ந்து பார்த்து ஆய்வு செய்தாய் !
காலத்தின் குறுகிய வரலாற்றினை
அறிவியல் வழி எழுதிக்காட்டினாய் !
இந்நெடிது காலம் பூமியில்
நாற்காலியோடு இருந்தது போதும்
அந்த வானையும் நட்சத்திரங்களையும்
அருகிலிருந்து பார்க்க ஆவல் கொண்டு
பறந்துபோய் விட்டாயோ !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Mar-18, 7:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1986

மேலே