முதுமொழிக் காஞ்சி 45
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நேரா நெஞ்சத்தோன் நட்டோ னல்லன். 5
- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், வேறாய் உடன்படாத நெஞ்சத்தோன் நட்டோனல்லன்.
பதவுரை:
நேரா - ஒற்றுமைப் படாத, நெஞ்சத்தோன் - மனத்தையுடையவன்,
நட்டோன் அல்லன் - சினேகன் ஆகான்.
கருத்து:
மனவொற்றுமை இல்லாதவன் சினேகத்துக்கு உரியவன் ஆகான்
மனத்தி னமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று. 825 கூடாநட்பு
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும். 785 நட்பு