மழைப் பெண்

மழைப் பெண்
ஒற்றை
வண்ணக்குடையில்
ஒற்றையாய்
நிற்கும்
மழைப்பெண்ணே!
துள்ளிக்குதித்த
நாட்களில்
மழைத்துளிகளை
பூவிரல்களில்
சூடிய நீ
இன்று
தவிர்ப்பது ஏன்?
அன்பு இழைகளில்
வதனம் வாடுவது
புரிகிறது.
காலமுள்ளில்
ரோஜா
பூக்கும்.
தேனி
மொய்க்கும்.
உன்
கன்று
உன்னிடம்
வரும்.
காத்திரு
கண்ணே!
இன்னொரு
மழைபொழுதிற்காக.
- சாமி எழிலன்
16 03 2018