டால்ஸ்டாய் இடுப்பில் அண்ணன் தாஸ்

அண்ணா...
தாஸ் வந்துட்டாரு...
ஸீட் போடுயா கேக்கணுமா...
ஸீட்டில் தாஸ்...
தாஸ் நல்லவர்
எதிர்த்து பேச மாட்டார்.
கேள்வி கேக்க மாட்டார்.
எந்தக் கவிதைக்கும்
இறும்பூது எய்தி
காலைக்கடன் முடித்த
நிம்மதி காட்டுவார்.
இவர் பாராட்டுக்கு
ஏங்காத ஜென்மம் இல்லை.
எழுதுவார்...
எழுதி எழுதி தள்ளும்
இவர் பாணி யாருக்குமில்லை.
இவருக்கு சிக்கியதெல்லாம்
கவிதைதான்...
கோள் மூட்ட தெரியாது.
எந்தக் கவிதையும்
குற்றமல்ல என்பதே இவர் கட்சி.
குலுங்கி குலுங்கி ரசிக்க
படைத்தவன் உருகுவான்.
சந்து பொந்தெல்லாம்
கவிக்காக அலையும் கவி.
கவிஞனை கண்டால்
குளுக்கோஸ் போட்ட
மாடு போல் சிலிர்ப்பார்.
ஐயா...இது குற்றமில்லையா
கவிதையென நம்பி எழுதி
நாசமாய்ப்போபவனை
தடுத்து நிறுத்தி
சொல்லக்கூடாதா....
தம்பி வெங்காயம்
உரித்தது போதும்
போய் புள்ள குட்டிக்கு
சம்பாதி என்று...
தமிழன்னை சபிப்பாளாம்.
அன்னைக்கு பயந்து
எகிறி எகிறி
இவர் ஆற்றும் சேவைக்கு
அணில்குஞ்சுகள்
நாய் குட்டிகளாய்
கால் சுற்றும்.
படிக்க மாட்டார்...
படிப்பு நேரவிரயமாம்.
எழுதும் எல்லோர்
பெயரும் நன்கு தெரியும்.
க.நா.சு சொல்லிட்டார்...
நீங்க மிஞ்சிடீங்க என்பார்.
படைப்பு சிகாமணிகள்
புளகாங்கிதம் மாளாது.
போதையில் ஒருநாள்
புலம்பி தள்ளினார்....
பொண்டாட்டி சனியன்
பிடுங்கு தாங்கலை...
பயத்துலே சிலருக்கு
வைத்தாலை போகும்...
பயம்டா எனக்கு...
அதுக்குத்தான்
எளிதி தல்லறேன்....
கேவி கேவி அழுதார்..
தேற்றினேன் நான்.
விடுங்க தாஸ்...
டால்ஸ்டாய் மாதிரி நீங்க...

எழுதியவர் : ஸ்பரிசன் (16-Mar-18, 1:17 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 134

மேலே