சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 51 நநு பாலிம்ப நட சி வச்சிதிவோ – மோஹந

பொருளுரை:

தாமரைக் கண்ணனே! உன் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே என் வாழ்வென்று நான் மனத்தில் அன்புடன் எண்ணியிருக்கும் மர்மத்தையறிந்து என்னைப் பாலிக்க நடந்து வந்தனையோ? என் பிராண நாதனே!

இந்திர நீலமணியையொத்த தேகப் பொலிவுடனும், திருமார்பில் அசைந்தாடும் முத்துமாலைக் குவியலுடனும், கரத்தில் ஏந்தியுள்ள கோதண்டம், அம்புகள் இவற்றின் ஒளியுடனும், பூதேவியின் புதல்வியாகிய சீதையுடனும் (என்னைப் பாலிக்க நடந்து வந்தனையோ?)

பாடல்:
பல்லவி:

நநு பாலிம்ப நட சி வச்சிதிவோ
நா ப்ராண நாத (நநு பாலிம்ப)

அநுபல்லவி:

வநஜநயந மோமுநுஜூசுட ஜீ-
வநமநி நெநருந மநஸு மர்மமு தெ லிஸி (நநு பாலிம்ப)

சரணம்:

ஸுரபதி நீலமணி நிப தநுவுதோ
உரமுந முத்யபுஸருல சயமுதோ
க ரமுந சர கோத ண்ட காந்திதோ
த ரணி தநயதோ த்யாக ராஜார்ச்சித (நநு பாலிம்ப)

யு ட்யூபில் Thyagaraja Kriti Nanu Palimpaga | T. M. Krishna | Carnatic Classical | Idea Jalsa | Art And Artistes என்று பதிந்து T. M. கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Maharajapuram Santhanam-Nannu Palimpa-Mohanam-Adi-Thyagaraja என்று பதிந்து மஹாராஜபுரம் சந்தானம் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் MS Subbulakshmi-Nannu palimpa-Mohanam-Adi-Thyagaraja என்று பதிந்து MS.சுப்புலட்சுமி இப்பாடலை ராகம், தானம், பல்லவியாகப் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-18, 3:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 107

சிறந்த கட்டுரைகள்

மேலே