சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 8 தே வாதி தே வ ஸதா சிவ – ஸிந்து ராமக்ரிய

பல்லவி:

தே வாதி தே வ ஸதா சிவ
தி நநாத ஸுதா கர த ஹந நயந (தே வாதி)

அனுபல்லவி:

தே வேச பிதாம ஹ ம்ருக் ய சமா-
தி கு ணாப ரண கௌ ரீரமண (தே வாதி)

சரணம்:

ப வ சந்த் ரகலாத ர நீலக ள
பா நுகோடி ஸங்காச ஸ்ரீ ச நு த
தவ பா த ப க்திம் தே ஹி தீ நப ந்தோ
த ரஹாஸ்வத ந த்யாக ராஜநு த (தே வாதி)

பொருளுரை:

தேவாதி தேவனே! சதாசிவ! சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய முக்கண்களை உடையவனே!

(நீ) இந்திரன், பிரமன் ஆகியோரால் தேடப் பெறுபவன் (எட்டாதவன்) சாந்தம் முதலிய குணங்களை அணிகளாக உடையவன். பார்வதி நாயகன். பரமசிவன்.

பிறை சூடிய பெருமான். நீலகண்டன்.
கோடி சூரியப் பிரகாசன். விஷ்ணுவினால் துதிக்கப் பெறுபவன்.
தீனபந்து. சிறுநகை தவழும் வதனனே!
உன் திருவடி பக்தியை எனக்கருள், த்யாகராஜனே.

ஸிந்து ராமக்ரிய ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை 1986 ஆம் வருடம் திருவாரூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, முதலமைச்சர் M.G.R, முன்னாள் பிரதமர் P.V.நரசிம்மராவ், முன்னாள் கவர்னர் S.L.குரானா அவர்கள் முன்னிலையில் M.S.சுப்புலட்சுமி பாடுகிறார். யுட்யூபில் கேட்டு மகிழலாம்.

Chittoor Subramanya Pillai - Musical Gems Part 20 என்று யுட்யூபில் பதிவு செய்து சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பாடுவதைக் கேட்கலாம்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-18, 2:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே