அபிராமி அபிராமி
என் மகள் எழுதிய
லீவ் லெட்டரை
மாமா மசாஜ் எனும்
தளத்தில் பதிப்பித்தேன்.
தர்மபிரபுக்கள்...
அற்புதமான கவிதையென
கொண்டாடி தீர்த்தனர்.
வழக்கம்போல
2 அருமையும் 4 niceம்...
தப்பாமல் வந்தது.
போனால் போகட்டுமென்று
ஒரு புண்ணியவான்
பகிரு செய்துள்ளார்.
தாடிதாத்தா நண்பர்
இன்னும் பார்க்கவில்லை...
பாவம்...அவர்
ஒப்பேராத இசங்களையும்
அட்ரஸ் இல்லாத
கவிதையும் படித்துவிட்டு
இதில் எங்கே கவிதை...
விட்மன் இதை சொல்கையில்
என்று உயிர் எடுப்பார்...
கிழத்துக்கு தெரியுமா?
நான் எழுதுவது
திட்டமிட்ட ஆள் கவரல்...
சத்தமில்லா பெண் தூது...
என்பதெல்லாம்....
பாவம் அவர்....
வயசான காலத்தில்...
அட..இது என்ன?
ஓ...சமையல் குறிப்பு...
போதும்...இது போதும்..
அபிராமியை கவர...
நடுவில் கொஞ்சம்
மானே... தேனே...
கவிதை ரெடி.
அபிராமி.. அபிராமி..