பெண்ணியமே உயிர்த்தெழுவாயாக
திறமைகளை மறைத்து துவண்டு தூக்கிடத் துணிந்தவளே...
முக்காடிட்டு முகமறைத்தால் ஆதியும் அந்தமுமற்றுப் போய்விடுவாய்
மூலையில் முடங்கி மனச்சிறை இட்டுக் கொள்ளாதே
கண்ணீர் மழையால் உன் கண்மைகளைக் கரைக்காதே
காலமிட்ட கட்டத்தைக் கடந்துதான் ஆக வேண்டுமே
மதிப்பெண்ணுக்குப் பயந்து உன் பெண்மையை இழக்காதே
கொடிய மிருகங்களுக்கு அஞ்சி உன்வீரத்தை ஊனமாக்காதே
அமிலக் குப்பிகள் வீசும் குப்பைகளிடம் படியாதே
அகிலத்திற்கு அமைதியாகவே தோற்றமளி, உள்ளத்தில் சீற்றத்தோடயேயிரு
பெண்ணியமே உன்மேல் கொண்ட பரிதாபத்தில் கூறவில்லை
பெண்ணென்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிறேன்
வீறுகொண்டெழுவதை விடுத்து விம்மிவிம்மி அழுவதேன்
தடைகளைத் தகர்த்தே திறமைகளைக் காட்டாற்று வெள்ளமாய் வெளிப்படுத்து
முடியாதென்று எதுவுமில்லை முயற்சித்தால்.............