அப்பா...
![](https://eluthu.com/images/loading.gif)
உன் உயிர்த்துளியில் கருவானேன்...
உன் வியர்வைத்துளியில் உருவானேன்...
உன்னால் ஓர் உயிரானேன்...
உன்னாலே நான் உயர்வானேன்...!!!
கஷ்டங்கள் ஆயிரம் நீ கண்டபோதிலும் -உன்
கண்களில் கண்ணீர் நான் கண்டதே இல்லை...
காலம் யாவும் என்னை சுமக்கிறாய் -என்
கால்கள் செல்ல புது பாதை வகுக்கிறாய்...!!!
எறும்புக்கே பயந்த என் அச்சம் நீக்கினாய்...
சிங்கத்தின் இனம் நீ என்று சிறகை நீட்டினாய்...
சின்னஞ்சிறு வெற்றியும் சிகரமென போற்றினாய்...
எரிமலையும் உருகுமென என்னை நீ மாற்றினாய்...!!!
தோல்வி கண்டு துவண்ட சமயங்களில்..,
தோழமை கொண்ட தோள்களில் தாங்கினாய்...
தோல்வி காண்பதில் தவறில்லை..,
துவண்டு விழுவதே தவறென்றாய்...!!!