மணிசோமனா ஜெயமுருகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மணிசோமனா ஜெயமுருகன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 413 |
புள்ளி | : 34 |
அப்பா வந்திடுவார்..!!!
இளைய அரசனே...,
இமைகள் மூடியே...,
இன்று தூங்கடா..,
நாளை வந்திடுவார்..!!!
உன் கண்கள் கக்கிடும்
கவிதை கோடியே...,
காண வந்திடுவார்..
அப்பா ஓடியே...!!!
உன் இதழ்கள் இசைத்திடும்...
மெல்லிசையும் கோடியே...,
இன்பம் கொண்டிடவே
இன்றே பறந்து வந்திடுவார்...!!!
உன் ஸ்பரிசம் நிரம்பிய
காற்று தூது சென்றிடும்..!!!
உன் தந்தை அவரையே
இங்கு இழுத்து வந்திடும்...!!!
அல்லி மலருனை..
அள்ளி அனைத்திட.
உன் அழகை ரசித்திட..
அப்பா வந்திடுவார்...!
அன்பு மிகுந்தவர்..
உன் அன்னை காதலன்..
அன்று சென்றவர்
இன்று திரும்பி வந்திடுவார்...!!!
அப்பா வரும்வரை
அம்மா இருக்கிறாள்
அயர்ந்து தூங
இதய ஊஞ்சலில் இடம்பிடித்தவனின்
வலமிருந்து..,
நிலம் பார்த்து தலை கவிழ்ந்தேன்...!
மலர் மாலையோடு மஞ்சள் கயிரும்..,
அதனோடு தனது உயிரும் சேர்த்து.,
உறவாய் கோர்த்தான்...!
எனக்காய் ஒருவன்..!
தொடங்கியது...,
அவன் வழியில் என் பயணம்...!
உதிரங்கள் ஒன்றாகி..,
உயிரொன்று கொண்டேன்...!
சில மாதம் உருண்டோடி..,
மதியாய் அவனைக் கண்டேன்...!
என்னால் ஒருவன்..!
தொடங்கியது...,
இவன் வழிக்காக என் பயணம்..!
கட்டிலால் விளைந்த தொட்டில்...
அங்கு கொஞ்சி விளையாடுது ஒரு பிஞ்சு...
அன்பின் அரவணைப்பில்..!!!
நேற்றையப் பொழுது கண்ணோடு
இன்றையப் பொழுது கையோடு
நாளையப் பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு ...
ஓடு ஓடு என்று சொல்லி நம்மை ஓடாமல்
நெஞ்சில் நிற்க வைக்கிறார் கவிஞர் .
கவிதை எதைப் பற்றி சொல்கிறது ? என்ன சொல்கிறது ?
உலகமே அழுகிறது..!
சுகமான சோகம்..
இன்பமான இம்சை..
செல்லமான சித்ரவதை..
வரமான சாபம்..
ஸ்வரமான கூச்சல்..
காகிதத்தின் கிறுக்கல்...
கிறுக்கல்களில் கவிதை...
கவிதையில் காதல்...
காதலில் வாழ்வு...
வாழ்வில் புதுமை...
புதுமையில் இனிமை...
இனிமையில் வளமை...
வளமையில் எளிமை...
எளிமையில் வலிமை...
வலிமையில் பொறுமை...
பொறுமையில் உண்மை...
உண்மையில் பெருமை...
பெருமையில் இளமை...
இளமையில் முதுமை...
முதுமையிலும் இளமை....!!!!