அப்பா வந்திடுவார்
அப்பா வந்திடுவார்..!!!
இளைய அரசனே...,
இமைகள் மூடியே...,
இன்று தூங்கடா..,
நாளை வந்திடுவார்..!!!
உன் கண்கள் கக்கிடும்
கவிதை கோடியே...,
காண வந்திடுவார்..
அப்பா ஓடியே...!!!
உன் இதழ்கள் இசைத்திடும்...
மெல்லிசையும் கோடியே...,
இன்பம் கொண்டிடவே
இன்றே பறந்து வந்திடுவார்...!!!
உன் ஸ்பரிசம் நிரம்பிய
காற்று தூது சென்றிடும்..!!!
உன் தந்தை அவரையே
இங்கு இழுத்து வந்திடும்...!!!
அல்லி மலருனை..
அள்ளி அனைத்திட.
உன் அழகை ரசித்திட..
அப்பா வந்திடுவார்...!
அன்பு மிகுந்தவர்..
உன் அன்னை காதலன்..
அன்று சென்றவர்
இன்று திரும்பி வந்திடுவார்...!!!
அப்பா வரும்வரை
அம்மா இருக்கிறாள்
அயர்ந்து தூங்கடா
அப்பா வந்திடுவார்...!!!
- மணிசோமனா ஜெயமுருகன்.