விவசாயம்

விவசாய நிலமே ...
தமிழ்நாட்டின் தடமே ...
நிலங்கள் நலமானால் ...
நம் வாழ்வும் பலமாகும் !
ஆடையின்றி வாழ்ந்தானே - அன்று விவசாயி !
ஊணை தந்து நம் உயிரை வளர்த்தானே - விவசாயி !
வயலின் வாசத்திலே நம் வயிறை நிறைத்தவன் !
வளரும் பயிர்களிலே நம் பசியை தீர்த்தவன் - விவசாயி !
இன்றைய உலகம் பழித்தாலும் ...
நாளைய பாரதம் - விவசாயி !
ஆதலால் ...
வளர்ப்போம் விவசாயத்தை ...
மதிப்போம் விவசாயிகளை ...

எழுதியவர் : M.Santhakumar (4-Nov-18, 11:22 am)
சேர்த்தது : Santhakumar
Tanglish : vivasaayam
பார்வை : 4331

மேலே