சான்றுகள் தேவையில்லை

------------------------------------------------
சாளரத்தின் வழியே
சாலையைப் பார்த்தேன்
சாரைசாரையாய் ஊர்திகள்
​சாதிமதமின்றி அணிவகுப்பு
சாலைவிதி மீறலில்லை
சாடிடவும் மனமில்லை
சாந்தகுணம் இல்லாரும்
சாத்வீகப் பயணமிங்கு
சாதனையாய் கூறவில்லை
சாலைகளின் நிலையிது
சாமர்த்தியம் இருந்தாலும்
சாகசங்கள் அறிந்தாலும்
சாந்தமே தேவையின்று
சாயங்கால வேளையில்
சாமானியன் நடந்திடவோ
சாணளவும் இடமில்லை
சால்ஜாப்பு கூறுகின்றார்
சாம்ராஜ்ய மன்னர்கள்
சாதுரியமாக பதிலை
சாலைகள் சீராகுமென
சாதிப்போம் விரைவிலென
சான்றுகள் தேவையில்லை
சாபமும் இடவில்லை
சாட்சிகள் வேண்டாம்
சாலைகளின் காட்சிக்கு !


பழனி குமார்
04.11.2018

எழுதியவர் : பழனி குமார் (4-Nov-18, 11:37 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 427

மேலே