தமிழரின் மாண்பு
எந்த நாளிலும் சொல்லிடுவோம் ...
தமிழன் என்று தலை நிமிர்ந்திடுவோம் ...
எந்த நாட்டிலும் நமக்கொரு மதிப்பு ...
இருந்தபோதிலும் ஏன் இந்த இழப்பு ...
பணத்தைக்காட்டிலும் நம் பாசம் பேசிடும் ...
தமிழ் இனத்தால் வெற்றி வீசிடும் ...
இந்த திருநாட்டில் வீசும் காற்று ...
நல்லுயிரைக் காக்கும் கம்பன் பாட்டு ...
உழவு செய்து உயிரை காப்போம் ...
உயிரே போனாலும் நீதி காப்போம் ...
நல்லோர் ஆண்ட பூமியினில் ...
எங்கள் வீரம் செறிந்து விளங்கியது ...
நஞ்சை , புஞ்சை அனைத்திலும்
எங்கள் வளமும் வாழ்வும் மலர்ந்தது ...