அந்த தூதுவர்கள் மழைக்கு காரணமில்லை

இரண்டு தூதர்கள்
என்னிடம் வந்தார்கள்.
அறிமுகத்திற்கு பின்பு
தேனீர் அளித்தேன்.
ஊதா நிற ஆடையிலும்
கருப்பு கோட்டிலும்
பளபளத்த அவர்கள்
அன்றைய பொழுது பற்றி
பேசினார்கள் தேனீர் அருந்தியபடி
என்னிடம் கேட்பதற்கு
கேள்விகளும் இருந்தன.
தேனீர் கோப்பை
நேரத்தை குடிக்கும்போது
அவர்கள் தேனீர் குடித்தனர்.
மழை வரும்வரை
கேட்டனர். பேசினர். அருந்தினர்.
மழையும் வந்தது.
தூரல்கள் காற்றில் மிதந்து
கோப்பையில் ஒட்டி ஒட்டி
திடமுற்று இறுகி இறுகி
பலமிழந்து வழிய துவங்கின.
தூதர்கள் கேட்டுக்கொண்டே
இருந்தனர் என்னிடம்.
அந்த கோப்பை
மழையில் நனைந்து
முற்றும் ஈரமாகி
வாசனையாகியது.
தூதர்கள் கைகுலுக்கி
தெற்கு வாயில் வழி சென்றனர்.
நான் கிழக்கு வாயிலில் வழி.
எனது கார் நனைந்து
சாலை நனைந்து
பூமி நனைந்து ஒரே ஈரம்.
ட்ராபிக் இன்ஸ்பெக்டர்
நடையோர புக்செல்லர் வில்சன்
பாதசாரி குடைகள் கூட ஈரம்.
எதிரில் இருந்த வாகனங்கள்
விளக்கு தூண்கள் அதுவும் ஈரம்.
நான் நினைத்துக்கொண்டேன்
அந்தக்கோப்பையை...

எழுதியவர் : ஸ்பரிசன் (3-Nov-18, 6:52 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 66

மேலே