அன்பே வா

எங்கே பாேகின்றேன் என்று தெரியாமல் நடக்கின்றேன்
எதைத் தேடுகின்றேன் என்று தெரியாமல் தேடுகின்றேன்
தாெலைந்தது நான் என்பதை மறந்து விட்டேனா?
காதலை காெடுப்பதற்காய் காயத்தை தந்து விட்டாய்
புன்கையைப் பறித்து கண்ணீரைக் காெடுத்து விட்டாய்
பூக்கள் கூட பனித்துளி வேண்டாம் என்று கண்ணீரைக் கேட்கிறது
துளித் துளியாய் உன் நினைவுகள் துயில் காெள்ளும் நெஞ்சமதில்
துணையான தனிமை மட்டும் தூங்காமல் காத்திருக்கு
அன்பே நீ ஒரு முறை வந்து விடு ஒரு வார்த்தை பேசிட