சில சமயங்களில் கவிதையிலும்

விரட்டி விரட்டி
துரத்திடும் வாழ்வில்
வழியறியாமல் இருளில்
ஓடுகின்றேன்
தூரத்தில் எங்கேனும்
வெளிச்சபுள்ளி கிடைத்திடாதாயென
ஆங்காங்கே இளைப்பாறிட
கவிதை!
கோபங்கள் கட்டப்பட்டு கிடக்கின்றன..
இரக்கம் வளிகையில்
சட்டைபைக்கும் கைக்குமான
தூரம் நீள்கிறது...
தாபங்கள் தாகத்தோடு
குளத்தினை தேடுகிறது...
மகிழ்ச்சிக்கு இல்லாத
விலங்குகளை நானே
பூட்டி கொள்கின்றேன்...
எண்ணில் அடங்காத
உணர்வுகள்
என்னிலும் அடங்க மறுக்கிறது
மனதின் வலிகள்
பல சமயம்
நாளைய தேவையில் கரைகிறது
சில சமயங்களில்
கவிதையிலும்..

எழுதியவர் : சுரேஷ் குமார் (19-Mar-18, 11:51 pm)
பார்வை : 89

மேலே