ஒருவன் வருகிறான்

வசந்தம் என்று நான் நினைத்ததெல்லாம்
சருகாய் வாடியதே.....
தென்றல் என்று நான் நினைத்ததெல்லாம்
புயலாய் மாறியதே....
சூடிய மலர் வாடியது போலவே
வாடுகிறேன் நான்......
எண்ணமெல்லாம் தீ புடிக்க
கனவுகளும் சாம்பலாகுதே....
ஓடிப்போய் ஒழிந்து கொண்டேன்
அடுத்தவன் வருகிறான்......
பெண் பார்க்க என்று சொல்லி......

எழுதியவர் : மு.அனிஸ் (20-Mar-18, 10:08 am)
பார்வை : 428

மேலே