முதுமொழிக் காஞ்சி 49

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
திறத்தாற்றின் நோலா ததுநோன் பன்று. 9

- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை: நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் தன் குலத்திற்கும் நிலைமைக்கும் தக நோலாதது தவமன்று.

நோற்றல் - விரதங்காத்தல்.

பதவுரை: திறத்து ஆற்றின் - தத்தம் கூறுபாட்டிற்கு உரிய வழியில், நோலாதது - காவாத விரதம்,

நோன்பு அன்று - விரதம் என்கிற கணக்கில் சேர்ந்ததன்று.

வருணாச்சிரமத்திற்கு ஏற்ற வழியிலே அனுஷ்டிக்கும் விரதமே விரதமாம்: ஏலாத வழியிலே அனுஷ்டிப்பது விரதமாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Mar-18, 10:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே