யானைதான் அந்த எருமை
எங்கோ கேள்வி பட்டது என் படைப்பல்ல....சிறிதளவு என் கற்பனை மட்டும் கலந்து...
ஓரு நாள் மாலை நேரம் வானம் இருகி மழை வரும் போல் போக்கு காட்டிகொண்டிருந்தது ஆனால் வரவில்லை காட்டின் எல்லையில் இருள் படரும் முன்பே இருட்டிவிட்டதைபோல் இருந்தது...
திடுமென காட்டிற்குள் இருந்து ஒரு பசு தலை தெறிக்க ஓடி வந்தது;காட்டின் எல்லையில் ஒரு யானையோ தனியாக ஒய்யாரமாக மூங்கிலை மேய்ந்துகொண்டிருந்து திடீரென வெடித்த ஓட்டத்தின் சப்தத்தை கேட்ட யானையோ பசுவை தடுத்து நிறுத்தி என்ன ஏன் இந்த அவசரம் என விசாரித்தது.
"ஏன் நண்பா இந்த வேகம்?"
பசுவோ ஆற்றாமை கொள்ளாமல்
"உனக்கு தெரியாதா யானையாரே இந்தியாவில் உள்ள அனைத்து எருமை மாடுகளையும் பிடித்து பத்து வருடங்கள் சிறையிலடைக்க உத்தரவு போட்டிருக்கிறது இந்த அரசாங்கம்..."
உடனே யானை ஏளனத்துடன்
"என்ன பசுவே எருமைகளைத்தானே பிடித்து சிறையில் அடைக்க போகிறார்கள் நீ ஏன் பயந்து ஓடுகின்றாய்?" என்றது..பசுவோ பயம் தெளியாமல்;"அது எனக்கும் புரியும் யானையாரே ஆனால் தவறாக என்னை எருமையென கைது செய்துவிட்டார்களென்றால் என்ன செய்வது?"
"அப்படி செய்து விடுவார்களா என்ன நியாயம் இல்லையே?"இது யானையார்..
"நியாயத்தை கொண்டு போய் அடுப்பில் போடும் ஒருவேளை எருமையென என்னை பிடித்துவிட்டார்களென்றால் நான் எருமையல்ல பசுதான் என நிரூபிக்க பதினைந்து ஆண்டுகள் போய்விடும் அதனால் தான் தலை தெறிக்க ஓடுகின்றேன்.."என கூறிவிட்டு வந்த வழி திரும்பி பார்த்து விட்டு முன்னே நோக்கியது பசு அங்கே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் எடுத்து ஓடிக்கொண்டிருந்தது அந்த யானை....