தக்காளி சட்னி

"டீ.வி.ய அமத்திட்டு இப்ப சாப்புட வர்றியா இல்ல அப்பாவ கூப்புடவா?"
"செல்-லயே நோண்டிட்டுருக்காத கண்ணு கெட்டு போயிரும் ஒழுங்கா படுத்து தூங்கு"
- வீட்ல இருந்தப்போ அலுப்போட கேட்டு நடந்த அம்மாவின் அதட்டல்கள் இப்போ வெளியூர்ல/வெளிநாட்ல வேலையில் இருந்துகொண்டு நினைச்சு பாக்குறோம்.

சரியான நேரத்துல சாப்டு தூங்குறதுலாம் அப்ப மறந்துபோயிருந்துச்சு. ஒவ்வொரு நாளும் ராத்ரி ஆபீஸ்வேல முடிஞ்சு வரப்போ சாப்ட கடை எதுவும் இருக்காது. வாழைப்பழம் தான் பசியாத்தும். ஒரு நாள் வாழைப்பழமும் கிடைக்கல. ராத்திரி பதினொன்ற மணிப்போல புதுசா ஒரு கடை திறந்து இருந்துச்சு. அங்க இருந்த ஒரு பாட்டி "என்னப்பா இந்த நேரத்துல நடந்து போயிகிட்டு இருக்க, சாப்டியா?" னு கேட்டிச்சு.

அறிமுகமே இல்லாத அந்த பாட்டி பரிவோட கேட்டுச்சோ, இல்ல புதுசா தொறந்த கடைக்கு கஸ்டமர் புடிக்கறதுக்காக கேட்டுச்சோ, அத பத்திலாம் எனக்கு கவல இல்ல. ஆனா அந்த ஊர்ல நான் ரொம்ப நாள் கழிச்சு கேட்ட வார்த்த "சாப்டியா". ஒரு நிமிஷம் எனக்கு வந்த அந்த ஆச்சர்யம் லேசா கண்கலங்க வச்சுது. அன்னிக்கு அங்க சாப்ட தோசையும் தக்காளி சட்னியும் பசிய மட்டும் போக்கல, நிம்மதியான தூக்கமும் குடுத்துச்சு.

பெரிய ஸ்டார் ஹோட்டல்ல வாசல்ல நின்னு "வெல்கம் சார்" சொல்றவர விட இந்த பாட்டி சொன்ன "சாப்டியா" தான் மனச தொட்டுச்சு, அம்மாவையும் ஞாபகபடுத்துச்சு.

எழுதியவர் : பாசில் (20-Mar-18, 10:59 pm)
சேர்த்தது : பாசில்
Tanglish : thakkaali chatni
பார்வை : 235

மேலே