மலராத நினைவுகள் பாகம்1

மலராத நினைவுகள் பாகம்1
#################

ஒவ்வொரு மனித மனத்திலும் காலம்
களவாட முடியா ரணம்
புதைந்தே கிடக்கிறது
இதோ இவனின்
ரணம்........................

அன்று அவன் கைபேசிக்கு
ஓர் அழைப்பு வந்தது
எடுத்தான்

ஒரு பெண் குரல்
ஹெல்லோ நீங்க
பாலாதானே?

ஆமா நீங்க யாரு?

தன் பெயரைச் சொன்னவள்
பாலா நீங்க ரேடியோவில்
கவிதை |கதை எழுதுவிங்ளா
நான் கேட்டு இருக்கேன்
ரொம்ப உருக்கமா
இருக்கும்
உங்க தோழி பற்றி நீங்க
எழுதிய கதை கேட்டேன்
அருமை பாலா
அதுவும் உங்க தோழிய பெண் கர்ணன். னு
சொன்னிங்க பாருங்க
மனச தொட்டுச்சி
இப்படியொர் தோழன்
நமக்கு இல்லையேனு
வருத்தமா இருந்து

என்னைப் பேச விடாமல்
மனப்பாடம் செய்து
சொல்வது போல விடாமல்
பேசினாள்

சரி என் நம்பர் யார் தந்தா?

ஒரு நண்பரை குறிப்பிட்டு
அவரிடம் வாங்கியதாய்
சொன்னாள்....

என்னைத் தெரியுமா
உங்களுக்கு கேட்டேன்
உங்கள தெரியாது
ஆனா உங்க கவிதை கதை தொடர்ந்து கேட்பேன்

கொஞ்ச நேரம் பேசியவள்
சரி பாலா உங்ககிட்ட
பேசியது மகிழ்ச்சி
மீண்டும் சந்திப்போம்
என்று இணைப்பை துண்டித்தாள்......

அன்றும் ரேடியோவில்
என் கவிதை வந்தது
கொஞ்சம் கழித்து
அவளிடமிருந்து
அழைப்பு வந்தது
மீண்டும் பாராட்டினாள்

சரிங்க நீங்க யாரு எங்கிருந்து பேசுறிங்க
உங்க பத்தி எதுவுமே
சொல்லல....

சொல்லிக்குற மாதிரி
நான் பெரிய ஆள் இல்ல பாலா சாதாரண பெண்
கவிதைகளின் ரசிகை
ஊர் பெயர் எல்லாம் எதுக்கு உங்க ரசிகை.னு
வச்சிக்கங்க போதுமா
சொல்லியபடி சிரித்தாள்

சரி விருப்பம் இல்லனா வேண்டாம் விடுங்க

அப்படியெல்லாம் இல்ல பாலா நேரம் வாரப்ப நிச்சயம் சொல்வேன்
சரியா.......

சரி உங்க விருப்பம்

பிறகு ஒரு வாரம் கழித்து
பேசினாள்
பாலா நலமா....?

நலம்தான் நீங்க நலமா
பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின் பேச ஆரம்பித்தாள்
அவளை பற்றி மனம் திறந்தாள்.........

பாலா எனக்கு அப்பா இல்ல அம்மா இரண்டு
அண்ணன் அவங்களுக்கும் கல்யாணம் ஆகிட்டு மனைவி சொல்லே மந்திரம்னு இருக்காங்க
நான் ஆசிரியர் பயிற்சி
முடிச்சேன் வேலை கிடைக்கல... நான் ரொம்ப கருப்பு பாலா அம்மா தவிர வீட்ல யாருக்கும் என்ன பிடிக்காது அம்மாவுக்கு ஒரே கவலை எனக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறதுதான்

அம்மா அன்னிக்கு அண்ணன்களிடம்
பேசினாள் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டிங்க அவளையும் ஒருத்தன் கையில புடிச்சி குடுத்தா நானும் நிம்மதியா போயிடுவேன்
நீங்கதானப்பா செய்யணும் உங்கள விட்டா அவளுக்கு யாரு இருக்கா?

ஆமா இவ இருக்கும் அழகுக்கு வரிசையில நிக்காங்க அம்பது நூறு பவுண் கேக்காங்க நாங்க எங்க போக?

பிள்ளையா பெத்துருக்க
கருங்குரங்கு போல இருக்கா எங்க போய் மாப்பிள்ள தேட..?

அவன்கள் பேசியத கேட்டு செத்தே போயிட்டேன் பாலா கூட பிறந்தவங்களே இப்படி பேசினா

நான் கோபமா கத்தினேன்

போங்கடா நீங்களும் உங்க பாசமும் இனி ஒரு வார்த்தை எவனாது பேசினா மரியாதை கெட்றும் என் வாழ்க்கை பத்தி யாரும் அக்கர படவேண்டாம் கோபமா கத்திட்டு அறைக்குள்
போய் அழுதேன்
அம்மாவும் அழுதா
அவளால் அழதான முடியும்

விடியும் வரை அழுதேன்
பிறகு தீர்க்கமா முடிவெடுத்தேன் பாலா

தொடரும் நாளை(1 )

எழுதியவர் : இ.பாலாதேவி (20-Mar-18, 9:23 pm)
பார்வை : 240

மேலே