பொல்லாத உலகம் .......கவிதைப் பாட்டு
பொல்லாத உலகமடா பொய்பேசும் மனிதரடா
நல்லதுக்கு காலமில்லை நல்லவர்க்கு வாழ்வுமில்லை
தேர்தலின் பெயர் சொல்லியே கரம் கூப்பி
தெரு வருவார்
ஆட்சியில் அமர்ந்து விட்டால் ஆளையே
மறந்திடுவார்
கத்தரிப் பூ சித்திரப் பூ காகிதத்தில் ரோஜா பூ
சித்தரித்த சின்னமேல்லாம் சுவரெல்லாம்
சிரிக்குதடா
(பொல்லாத .......)
சாலைப் பெயரகள்டா சந்திச் சிலைகள்டா
நல்ல நல்ல தலைவரெல்லாம் நடுரோட்டின்
சின்னமடா
அவர் சொன்னதை மறந்துவிட்டார்
காகிதத்தில் அச்சடித்து காற்றினில்
பறக்கவிட்டார்
(பொல்லாத.......)
குண்டு வைக்கும் மனிதரின் குணமெல்லாம்
குடலைக் கலக்குத்டா
பீதி வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்து
ஓடுதடா
மானுடம் அழியுதடா
நீதி செய்ய கடவுளும் இன்னும்
வரவில்லையடா
(பொல்லாத ......)
.......கவின் சாரலன்

