ஜோதிடம் ...!

பனிரெண்டு கட்டங்களுக்குள் அடக்கம்
பாவி மனிதனின் வாழ்கை ..!
சந்திரனும், சூரியனும் தன்வேலையை
செய்ய, மனிதன் மந்திரம்
மாயம் செய்யும் தந்திரம் தேவையோ..?

எந்திரம் ஆளும் இருபத்தியோராம் நூற்றாண்டில் ,
மந்திரம் மனித வாழ்க்கையை மாற்றும் என்றும் ,
தந்திரம் தனம் சேர்க்கும் என்றும் ,

நாளைய சரித்திரம் படைக்கபோகும்
இன்றைய இளவல்களுக்கு மந்திரத்தின் மீது
மயக்கம் உண்டாக்கும் மடையர்களுக்கு ,

யந்திரன் கொண்டு மன கண்ணிமை திறந்து
தன திறமை வளர்த்து மனித நேயத்தை உரைத்து
புதிய உலகை படைத்திடுவோம்..!
புவியை மாற்றி அமைத்திடுவோம்..!!

வளியை படித்திடும் வழியை படித்திடுவோம்..!!!
சாமானியன் மூளை எனும் யந்திரன் கொண்டு
புது சரித்திரம் படைத்திடுவோம்..!!!!!


வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (8-Aug-11, 9:42 am)
பார்வை : 384

மேலே