சிறகுகள் முளைக்கும்

சிறகுகள் முளைக்கும்

சிறகுகள் முளைக்கும்
சிலைகள் பேசும்
தோல்விகள் தோற்று போகும்
வலிகள் வடிந்து போகும்

அன்பின் எல்லை விரியும்
அறிவின் ஆணவம் உடையும்
அடுத்தவர் வலி அறியும்
மழலையின் மனம் புரியும்

இரவுகள் மௌனம் இசைக்கும்
இயற்கை செய்திகள் சொல்லும்
கனவுகளின் இனிமை கூடும்
நினைவுகளின் ஏக்கம் குறையும்

காற்று வெளியினில் தொலைந்து போகலாம்
கடல் அலையில் கலைந்து போகலாம்
நட்சத்திரங்களை நண்பர்கள் ஆக்கலாம்
நிலவை தோழி ஆக்கலாம்

ஊன்கடந்து உயிர் பருகலாம்
உயிர் பூக்கும் வாசம் உணரலாம்
காரணமின்றி கரைந்து போகலாம்
காலம் கடந்து போகலாம்

உயிர்களின் ஓசை கேட்கும்
மனம் தெளியும்
மானுடம் புரியும்
கவிதை எழுதுங்கள்

எழுதியவர் : சூரிய காந்தி (22-Mar-18, 7:45 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
Tanglish : siragukal mulaikkum
பார்வை : 162
மேலே