தாய் தமிழ் மொழி
![](https://eluthu.com/images/loading.gif)
தமிழ்....
அகரத்தில் தொடங்கி,
னகரத்தில் முடிகிறது...
உயிர், மெய், உயிர்மெய்
சிறப்பாய் ஒற்றை ஆயுதம்
குருதியாய் கொண்டு
உருவெடுத்து நடைபோடும்
உலகின் மூத்த மோழியாம்...!!!
உச்சரிக்கும் ஒவ்வொருவரையும்..,
உச்சந்தலை முதல்... உள்ளங்கால் வரை
உயிருள்ளும் சிலிர்க்க செய்யும்
உண்ணத மொழியாம்....!!!
தன்னிகரற்றது தமிழின் தனித்தன்மை..,
தன்னோடு கொண்ட
இலக்கண, இலக்கிய வளங்களால்
தரணியெங்கும் பவனி வரும் மொழியாம்...!!!
கசடதபற வல்லினமாம்...
ஞஙண நமன மெல்லினமாம்...
யரலவழள இடையினமாம்...
யாவரும் இங்கே ஓரினமாம்...!
அன்னை தமிழால்
விதைத்தாள் அன்று...!
அது விருட்சமாய் என்னுள்
வளர்ந்து நிற்கிறது இன்று..!!!
தேசமெல்லாம் போற்றி புகழும்
தேவர் அவரின் திருக்குறள்..,
தமிழுக்கு வந்த சிறப்போ..?!
தமிழால் வந்த சிறப்போ..?!
ஏதாகினும்..
எம்மொழி உலகப் பொதுமறையானதில்
எல்லையற்ற இன்பமே...!!!
எண்ணற்ற வார்த்தைகள் எம்மொழியிலிருப்பினும்..,
போதவே இல்லை..,
அவளின் சிறப்பை எழுத...!
ஐயம் நீக்கி.., அறத்தை காக்கும்
ஐம்பெருஞ்சிறு காப்பியங்கள்..
யாவும் உன்னுள்ளே அடங்கிப்போக
உலகமே அடங்கிவிடக்கூடும்
உன்முன்னால்...!!!
செவ்விதழ் யாவும் செம்மொழி என்னும்
தமிழ் மொழியே பேச..,
செந்தேன் சுவையும் குன்றிப்போகும்...!!!
எம்மொழி என்றும் இம்மண்ணில் வாழும்....!!!