பூவே உன்னைப் புகழ-வா

பூவே உன்னைப் புகழ-வா..!
======================

பூவென்றாலே அதனுடன் மணமும் சேர்ந்ததுதானே..
..........பூவோடு சேர்ந்தநாரும் கூடமணக்கும் என்பார்கள்.!
பூவெல்லாம் ஒன்றுசேர்ந்து மணக்கின்ற இடத்தில்..
..........புதிதாயங்கே மலருமாமொரு விழாவோ நிகழ்ச்சியோ.!
ஆவென்றே அதிசயிக்கும் ஆளுயரப் பூமாலையென..
..........அன்பிற்கே அடையாளமாய் திகழுமிந்தப் பூக்களாம்.!
வாவென் அன்பேயென அழைக்கவும் ஓவென்றழவும்..
..........வாங்குகின்ற ஒருபொருளாகத் தானுனைப் பார்ப்பார்.!

பெண்ணவள் மலரும் தன்மைக்கு வந்துவிட்டாளென..
..........பூக்கள்பலச் சூடித்தான் சூசகமாகத் தெரிவிப்பாரன்று.!
பெண்ணுக்கும் மலருக்கும் அதிகத் தொடர்புண்டாம்..
..........பூச்சூட்டலெனும் நிகழ்ச்சியே அதற்குத் தகும்சான்று.!
எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டிய பாவைக்கு..
..........எண்ணற்ற வளையலும் பூக்களும் பரிசளிப்பாரன்று.!
கண்ணான மருமகளின் தலையில் மொட்டுப்பூச்சூடும்..
..........காட்சியாக மாமியாரே மருமகளுக்குச் சூட்டுவாராம்.!

பெண்களை மலரென்பார் கவிஞரும் பாவலரும்..
..........போற்றும் குண மிருவருக்கும் உண்டென்பதாலோ.!
பெண்ணைத் தெய்வமாக மதிக்க வேண்டுமெனவே..
..........பெண்தெய்வம் விழாக் கொண்டது பூச்சொரிதலாலே.!
ஆண்டகையொருவன் போரில் வெற்றி பெற்றால்..
..........அந்நாளில் அவன்தலையில் பூவால் வாகைசூடுவார்.!
கண்ணுக்கு விருந்தாகும்!..கவிதைக்குக் கருவாகும்!..
..........காதலர்களுக்குப் பரிசாகும்!.வண்ணமிகு பூக்களாம்.!

====================================================

வல்லமை படக்கவிதைப் போட்டியில் இடம்பெற்றது

படம் நன்றி:: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (24-Mar-18, 5:54 pm)
பார்வை : 47

மேலே