நன்றி நதியே...
நீ அமிர்தம் போன்றவள்...!
நீயே பிறப்பு முதல்
இறப்பு வரை
உயிரினங்களை வழிநடத்துகிறாய்...!
மேடு பள்ளங்களை கடந்து வரும்
உன்னிடமே கற்றுக்கொள்கிறோம் நாங்கள்...,
வாழ்வின் இன்ப துன்பங்களை
சமமாய் காணவும்...,
துன்பங்களை கடந்தால் மட்டுமே
நிலையான வாழ்வு என்பதையும்...!
மேகத்தில் கருவாகி...
மழைத்துளியாய் உருவாகி...
அருவியாய் தொடங்கி...
ஆறாய் தொடர்ந்து...
கடலைத் தொடுகிறாய்...!
வரும் வழிகளுக்கு எல்லாம்
வளம் சேர்க்கிறாய்...!
வாடும் நிலங்களை எல்லாம்
வாழ வைக்கிறாய்...!
நீ இல்லாத கோடைத் தருணங்களில்
உனக்காக காத்திருக்கிறோம்...!
காணல் நீராய் நீ தெரிந்தபோதிலும்
கண்டு மகிழ்கிறோம்...!
காற்று உன்னை தொட்டு
வரும் வேளையில்..
கரையில் நிற்கும் நாங்கள்
கரைந்துதான் போகிறோம்...!
தேவர் சொன்னார் அன்று...
"நீர் இன்றி அமையாது உலகம்"
ஆம்!!!
நீ இன்றி அமையாது உலகம்...!
இதைவிட சிறப்பாய் சொல்ல
யாரால் இனி இங்கு முடியும்...!!!
உன் கரையில்
காத்திருக்கும் நாணல் கூட
எனக்கு சிறப்பாகதான் தெரிகிறது...!
தென்றலுக்கு தலையாட்டும் நாணல்
புயலுக்கொன்றும் ஒடிவதில்லையே...!!!
யார் சொன்னது நீரோட்டம் என்று உன்னை..?!
இவ்வுலகின் உயிரோட்டமல்லவா நீ...?!
எங்கோ பிறந்து..
எங்கெங்கோ திரிந்து..
எங்கேயோ கலக்கும் நீ....
எங்களை வாழ வைக்கிறாய்...!
நன்றி உனக்கே நதியே...
எங்கள் நன்றி
என்றும் உனக்கே...!!!