உன் பார்வை

என்னுள் எங்கோ
ஓரமாய் ஒளிந்திருந்த
காதல் கனவுகள்
மொத்தத்தையும்
திறந்துவிட்டுவிட்டு
பறந்துவிட்டதடி உன்
பார்வை பட்டாம்பூச்சி....
உன்னைபார்த்த
முதல் நொடியில்
எனக்குள் ஏற்பட்ட
அத்தனை மாற்றங்களுக்கும்
மொத்தமாய்
ஒரு பெயர்வைத்தேன்
காதல் என்று.....
உன் பார்வையெனும்
பாறைகொண்டு
பள்ளம் செய்த
என் இதயத்தில்
கொஞ்சம் புன்னகை ஊற்றி
நிரப்பிவிட்டு போயேன்....