மரம்

மனிதனே கடவுளாம் உனக்கு
ஒற்றை காலனே

உனக்கு சிவனும் அவன்தான்
பிரம்மனும் அவனே தான்

தந்தவன் தந்தயாம்
பெற்றவள் தாயாம்
பிறந்தது பிள்ளையாம்

மனிதனின் பானியில்

விதையை அவளுக்கு தந்தாய்
விதையாய் மண்ணிற்கு உன்னை தந்தாய்
பெற்றவளோ பூமித்தாய்
விந்தையாய் மரம் எனும் பிள்ளையாக மீண்டும் நீயே பிறந்தாய்

நீ மண்ணின் கணவனா, இல்லை
அவள் கரு கண்டவனா

பூமியில்
உன் அங்கமான வேரினை மண்புடவை கொண்டு பூசி மறைத்துக்கொள்ளும் தருணம் பெண்ணியத்தை தோற்கடிக்கும் நாழிகை,
அவளுக்கு சாகும் வரை அதை மறைத்து கொள்ளும் அம்சம் உன்னைப்போல் கிடைப்பதேயில்லை.

ஞாயிறு நிழலில் உன் ஈரம் என்மேல் வடிய
திங்களின் தீண்டலில் நீயும் என்னைப்போல் ஒருவன்

சுவாசம் நமக்குள் சமரசம் செய்துக்கொள்ளும் விந்தை
உனக்கும் எனக்கும் அல்லவோ


வகைப்படுத்தப்பட்ட போதிலும்
வஞ்சம் காட்டாத முகம் அல்லவோ உனது

பாமரனின் பசி போக்க உன் முந்தியை எடுத்து விரிக்கும் நீ
நிழலாய்
உன் முந்தியை எடுத்து விரித்தாய் நீ
பருவ நிலையின் பசியையும் போக்க பட்டு போவாயே

இளமையும் முதுமையும் மாறிமாறிப்பெரும் வரம் கொண்ட மர்மம் உனக்கல்லவோ தெரிந்த சூச்சமம்
இலையோடு இளமையாய்இலைக்கொட்டி முதுமையாய்

கட்டிலில் தொடங்கும் என் வாழ்வில்
தொட்டிலாய் ஆடினாய் என் அழுகையில்
நான் கட்டையில் போகும் போதும்
உறவை மறுத்து
உன்னை கூட்டி செல்ல துணிவேன்
புதைப்படுகையில் என் படுக்கை அறை இரண்டாம் தலையணையாய்
எரிக்கப்படுகையில் என் பிரேதப் போர்வையாய்

எழுதியவர் : தினேஷ்கர் பாஸ்கர் (29-Mar-18, 3:15 pm)
Tanglish : maram
பார்வை : 218

மேலே