விழாத் தலைவன்

கொள்கையில் உறுதி
லட்சியத்தில் பிடிப்பு
நட்பில் நாட்டம்...

நியாயத் தராசு...
நல்ல விஷயங்களுக்கு
வரவேற்பு... இவனிடம்
உண்டு உத்தரவாதம்...
எளிமைக்குக் கொடுப்பான்
முக்கியத்துவம்...
இவன் இன்று பிறந்தநாள்
விழாத் தலைவன்...
இவனுக்குப் பிடித்தவன்
யார் காலிலும்
விழாத் தலைவன்...

அநியாயங்களுடன்
சமரசம் செய்து கொள்ளாமை...
இதுதான் நண்பன்
காளிராஜா...

மின்னணுவியல் தொடர்பியல்
இவனது வாழ்வாதார வாகனம்...
சிந்தனை செய்வதில்
வானமே இவனது எல்லை...
ஆழ்ந்த கருத்துக்களில்
இவனுக்கு இணை
யாரும் இங்கு இல்லை...

காளிராஜா...
நாட்டு வரலாற்றின்
வேர்களைக் காண
முயலும் பயணத்தில்
அதன் விழுதுகளை
விசாரிக்கத் தவறுவதில்லை..
இவனது சிந்தனை முற்றத்தில்
நியாயத்தின் கோலங்கள்
நிரந்தரமானவை...
என்றும் அழிவதில்லை...

இவனைப் போல் லட்சியவாதிகள்
இவ்வுலகில் வெகு சிலர்..
தீயவர்களைப் பார்த்து
பழுதான உலகத்தின் கண்கள் இவனைப் பார்த்து தன் குறைகளுக்கு
மருத்துவம் செய்து கொள்கிறது...

நேர்மையான அரசாங்கம்
நிலைத்திட காளிராஜா
செய்யும் யாக வேள்விகளுக்கு
பெருந்தலைவர் காமராஜரின்
ஆன்மா நெய் ஊற்றட்டும்..

மார்ச் இருபத்தொன்பது...
அகவை இவனுக்கு
ஐம்பத்து மூன்று...
காளிராஜா... எனதினிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
ஆண்டவன் அருளால்
வாழ்க வளமுடன்...
இது என் விருப்பம்.

இவனது கனிந்த இதயம்
கற்களை கரைய வைக்கும்...
இவனது சிந்தனைகள்
பாறை இதயங்களை
மிரள வைக்கும்...
வாழ்த்துக்கள் காளிராஜா...
👍🙏🌹🍰🎂🙋🏻‍♂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (30-Mar-18, 12:28 am)
பார்வை : 132

மேலே