நட்பின் நினைவுகள்
நட்பு எனும் புதுத்துறையில் இணைந்தோம்,அன்பினை பகிர்ந்தோம்
நினைவுகளில் மனதெங்கும் மகிழ்ச்சியினை அடைந்தோம்
நமக்கு உண்டான நட்பு என்றும் முடிவதில்லை
நினைவுகள் இருக்கும்வரை பிரிவு என்பது ஒன்றுமில்லை
நட்பின் நினைவுகள் பல்லாயிரம்,அவற்றிக்கு ஈடாகுமா பல ஆயிரம்
ஒவ்வொரு நினைவுகள் நினைவில் முன்னே வர
என் கண்ணில் கண்ணீர் பின்னே வர
நாம் பழகிய காலமோ குறைவு ,ஆனால் நம்
நட்பின்நினைவுகள் தருவதோ மனநிறைவு
நான் நம் நட்பின் உணர்வுகளை இக்கவிதையின் மூலம் உமக்கு சமர்ப்பிக்கிறேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
