நினைவலைகள்

வா நண்பா..
என் கனவில் அல்ல என் அருகில்...
என் கனவில் வர நீ என் கற்பனை ஓவியம் அல்ல, எந்தன் கதை சொல்லும் காவியம் நீ,

நான் திரும்பி பயணிக்க நினைக்கும் வழியெல்லாம், உன் காலடித்தடமும் என்னுடன் பயணிக்கிறது....
வழி சொல்லும் வழிப்போக்கனாய் அல்ல, முடிவில்லா நம் நட்பின் முடி சூடாஉன்னதமாய்......

திகட்டாமல் திகைக்க வைக்கும் உன் அறிவுரைகள், உன் வரலாறு பாட சொல்லி என்னை
அறிவுறுத்துகிறது....

நிறைவு செய்கிறேன்,
நினைக்கும் பொழுதெல்லாம் இனித்திடும் என் நண்பனின் நினைவலைகளுடன்....

எழுதியவர் : சுகுணா (29-Mar-18, 3:24 pm)
சேர்த்தது : Suguna
Tanglish : ninaivalaigal
பார்வை : 282

மேலே